PAGE 11

காலி பிளவரின் குணங்கள்:  CABBAGE

கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.
___________________________________________________________________________________________

பப்பாளி - அற்புத மருத்துவ குணங்கள்..!!  PAPPAYA


பப்பாளிக் காயிலிருந்து எடுக்கப்படும் பால் ( Latex ) பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுவதால் இது வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

சாப்பிடும் முறைகள்:

பப்பாளிக்காயை பொறியல் செய்து உண்ணலாம்.

அல்லது சாறு போல் அரைத்தும் அருந்தலாம்.

இப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதன் மீது சீரகத்தூள், தேன், சிறதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

இப்பழத்துண்டுகிளின் மீது பனங்கற்கண்டுத் தூள் தூவியும் சாப்பிடலாம்.

சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்குத் தொட்டுக் கொள்வதற்கு ஜாம் போல பயன் படுத்தலாம்.

இரவு உணவில் பப்பாளிப் பழத்தினைக் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அசைவப்பிரியர்களுக்கு ஓர் செய்தி:

ஆட்டு இறைச்சி சமைக்கும்போது பப்பாளிக்காயை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

பலன்கள்:

பப்பாளிப்பழம் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.

இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.

நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.

கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.

பப்பாளிப் பழத்தின் விட்டமின் ‘ ஏ ‘ மிகுதியாக அடங்கியுள்ளது.

பப்பாளிக்காயை சாறு அரைத்துக் குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெறியேறும்.

தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழாலாம்.
____________________________________________________________________________________________

நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழங்கள்..!

இன்றைய காலத்தில் உடலில் ஏற்படும் நோய்களில் முதலில் இருப்பது நீரிழிவு தான். இந்த நீரிழிவு வந்தால், உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே ஆகும். இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான். இந்த நீரிழவு பிரச்சனை வந்தால், பின் எந்த ஒரு உணவையும் நிம்மதியாக சாப்பிட முடியாது. ஏனெனில் உண்ணும் உணவுகள் சிலவற்றில், சர்க்கரையானது அதிகம் நிறைந்திருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும்

உணவுப் பொருட்கள் அனைத்தையுமே சாப்பிடக் கூடாது என்பதில்லை. சொல்லப்போனால் பழங்கள் கூடத் தான் இனிப்பாக இருக்கும். நிறைய மருத்துவர்கள் தினமும் குறைந்தது 4-5 பழங்களையாவது சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதற்காக நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன?

நிச்சயம் சாப்பிடலாம். ஏனெனில் பழங்கள் கூட இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும், தினமும் பழங்களை சாப்பிடுவது நல்லது. அதிலும் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.

முக்கியமாக அளவுக்கு அதிகமாக எதையும் சாப்பிடக் கூடாது. பின் அதுவே நஞ்சாக மாறிவிடும். மேலும் சில பழங்களை சாப்பிட்டால், இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். எனவே இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா


கிவி:
கிவி பழங்களை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும் என்று ஆய்வுகள் பலவற்றில் கண்டறியப்பட்டுள்ளன.

நாவல் பழம்:
நாவல் பழத்தின் நிறத்தை பார்க்கும் போதே நாஊறும். அத்தகைய நாவல் பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பழம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். அதிலும் இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், நீரிழிவை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.

நட்சத்திரப் பழம்:
இந்த நட்சத்திரப் பழம் நெல்லிக்காய் போன்ற சுவையுடையது. இந்த பழத்தை நறுக்கினால், நட்சத்திரம் போன்று காணப்படும். இத்தகைய பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

கொய்யா பழம் :
நீரிழிவு மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கொய்யா பழம் நல்ல தீர்வைத் தரும். அதிலும் கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

செர்ரி:
செர்ரிப் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 20 ஆக இருப்பதால், இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.

பீச்:
இந்த பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதோடு, மிகுந்த ஆரோக்கியத்தை தருவதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சூப்பரான பழம்.

பெர்ரி :
பெர்ரிப் பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் இந்த வகைப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஆகவே இந்த பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிள் :
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை சாப்பிடும் போது கொலஸ்ட்ரால் குறைவதோடு, செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிலும் இந்த பழத்தில அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.

அன்னாசி:
பழம் அன்னாசியில் ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருப்பதால், சாதாரணமாகவே உடலுக்கு சிறந்த பழம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

பேரிக்காய் :
இந்த சுவையான பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லாம். அந்த பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

பப்பாளி :
பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பழம்.

அத்திப்பழம்:
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை இன்சுலின் செயல்பாட்டிற்கு பெரிதும் துணைப் புரிகின்றன.

ஆரஞ்சு :
இந்த சிட்ரஸ் பழத்தை தினமும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவானது குறையும். அதிலும் இவற்றில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.

திராட்சை:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராட்சை ஒரு சிறப்பான பழம். எப்படியெனில் இந்த பழத்தை சாப்பிட்டால், இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.

மாதுளை :
மாதுளையில் உள்ள சின்ன சின்ன சுவைமிக்க கனிகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிசமமாக்கும்.

நெல்லிக்காய் :
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த, ஆரோக்கியத்தை தரும் பழங்களுள் ஒன்று.
____________________________________________________________________________________________________

ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்.
_____________________________________________________________________________________________

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…!

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
____________________________________________________________________________________________