பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.
பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.
உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.
இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.
நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.
இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.
இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.
பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.
கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.
_____________________________________________________________________________________________
அத்திப்பழம்
அத்திப்பழம்
ஆரோக்கியமான அழகை
தரக்கூடிய ஊட்டச்சத்து
மிக்க பழம்
என்று உணவியல்
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்திப்பழத்தைத் தொடர்ந்து
உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ்
பருவத்தில் பெண்களுக்கு
வரக்கூடிய மார்பகப்
புற்றுநோய் ஏற்படுவதில்லை
என ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. இப்பழத்தில்
உள்ள பென்சால்டைஹைடு
என்ற இரசாயனப்பொருள்
புற்றுநோயை உண்டாக்கும்
செல்களுக்கு எதிராகப்
பணிபுரியக்கூடியது.
அத்திப்பழத்தில்
நார்ச்சத்து அதிகம்
உள்ளது. இது
உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது.
அத்திப்பழத்தில் வைட்டமின்
பி, கே
ஆகியவை அடங்கியுள்ளன.
இது ஆன்டி
ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது.
இதில் அதிக
அளவு கால்சியம்,
இரும்புச்சத்து, மாங்கனீசு
போன்றவை காணப்படுகின்றன.
அத்திப்பழம்
உயர் இரத்த
அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
இதற்குக் காரணம்
அதில் உள்ள
பொட்டாசிய சத்துதான்.
பரபரப்பான இன்றைய
சூழ்நிலையில் சமைத்து
உண்பதை விட
ரெடி மேட்
உணவு வாழ்க்கைக்கு
பெரும்பாலேனோர் மாறிவருகின்றனர்.
டின்களில் பதப்படுத்தப்பட்ட
பொருட்கள், வறுத்த
பொரித்த உணவுகள்,
துரித உணவுகள்
இவற்றை அதிகம்
உண்ண தொடங்கிவிட்டனர்.
இதில் அதிக
அளவில் சோடியம்
அடங்கியுள்ளது. இதுவே
உயர் இரத்த
அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனவே அத்திப்பழத்தை
உட்கொள்வதன் மூலம்
உயர் ரத்த
அழுத்த நோயை
கட்டுப்படுத்தலாம் என்கின்றனர்
நிபுணர்கள்.
இதில்
உள்ள இரும்புச்சத்து,
இரத்த சோகை
நோய் ஏற்படாமல்
தடுக்கிறது. அதேபோல்
கால்சியம் சத்து
அதிகம் உள்ளதால்
எலும்புத் தேய்மானத்தையும்
தடுக்கிறது. இப்பழத்தில்
காணப்படும் பொட்டாசியம்,
சிறுநீரில் ஏற்படக்கூடிய
கால்சிய இழப்பைக்
குறைக்க உதவுகிறது.
எனவே எலும்புகளை
வலுவாக்க இருவிதங்களில்
செயல் புரிகிறது
அத்திப்பழம்.
இதில்
உள்ள ஆக்ஸலேட்
ரசாயனம் சிறுநீரக
கல் ஏற்படாமல்
தடுக்கிறது. அத்தி
மர இலைகளைச்
சாப்பிட்டு வந்தால்
இன்சுலின் சுரப்பு
சரியாவதோடு நீரிழிவு
நோயில் இருந்து
விடுபடலாம். இதயநோய்
ஏற்படாமல் தடுக்கிறது
மேலும் புற்றுநோய்
செல்களின் வளர்ச்சியை
கட்டுப்படுத்துகிறது. நீரில்
கரையக்கூடிய மற்றும்
கரையாது நார்ப்பொருள்
அத்தியில் காணப்படுவதால்
மலச்சிக்கல் பிரச்னைக்கும்
தீர்வாக உள்ளது.
_____________________________________________________________________________________________
வெள்ளரி ( CUCUMBER )
வெள்ளரியை
தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால்
பிரஷர்
சமநிலைப்படும்.
நெஞ்சக எரிச்சல்,
வயிற்று எரிச்சல்,
அல்சர்,
வாயுத்தொல்லைகளும்
குணமடை
யும். மேலும்
வெள்ளரி,
கேரட் கலந்த
ஜூ�ஸ குடித்து
வந்தால்
வாத சம்பந்தமான
நோய்கள்
குணமடையும்.
கண்களைச்
சுற்றி வெள்ளரி
துண்டுகளை
வைப்பதன்
மூலம் கண்
எரிச்சல்
மாறுவதுடன்
வீக்கமும்
குணமடையும்.
உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. கண் எரிச்சலில் இருந்து நம்மை காக்கிறது. வெள்ளரியை சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். கேன்சர் வராமல் தடுக்கிறது. தலைவலியில் இருந்து காக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. தோல் மற்றும் முடியை பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது வெள்ளரி. இதுபோன்ற ஏராளமான நன்மைகள் கொண்ட வெள்ளரியை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே..வெயிலுக்கு இதமான வெள்ளரியில் அதிக நன்மைகள் உள்ளன. வைட்டமின் பி சத்துள்ள இந்த வெள்ளரியில் நீர்சத்து அதிகம் உள்ளது.100 gm வெள்ளரியை அப்படியே சாப்பிட்டால் நமக்கு,
carbohydrate - 3.63 gm
சர்க்கரை - 1.67 gm
நார்ச்சத்து - 0.5 gm
கொழுப்புச்சத்து - 0.11 gm
protien - .65 gm
vitamin பி1 - 0.027 ml
vitamin பி2 - 0.033 ml
vitamin பி3 - 0.098 ml
vitamin பி5 - 0.259 ml
vitamin பி6- 0.040ml
vitamin இ - 2.8 ml
calcium - 16 ml
iorn - 0.28 ml gm
magnesium - 13
phosporus - 24
pottasium - 147
zinc 0.20 gm
_____________________________________________________________________________________________