PAGE 3

சருமத்தை அழகாக்கும் கரட் : ( CARROT )


நமது உடல் அழகுடன் மின்ன செய்வதில் க‌ரட் மிகவும் சிறந்த ஒன்று. அது சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் ஏற்றது. அதேப்போல் சருமத்திற்கும் அழகைத் தருகிறது.



* உடல் மற்றும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உடலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும். அதற்கு தினமும் உணவு உண்டப்பின் ஒரு க‌ரட்டை சாப்பிட வேண்டும். இதனால் வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து, உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடுவதோடு, உடலில் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.


* இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.

* கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.

* தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கும்.
_____________________________________________________________________________________________

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை


அவசியம்உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள்தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை  அவசியம் சாப்பிட வேண்டும்.
எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறதுஅதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டதுகுடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.
பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள்  பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ்வைட்டமின் , பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.
சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு  விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும்  புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.
பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு  சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும்  பங்கெடுக்கிறது.
பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.
கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.
_____________________________________________________________________________________________



பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-

* நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.

* குங்குமப்பூவை, தாய்ப்பாலில் குழைத்து கண்மீது பற்றுஇட கண் நோய் குணமாகும்.

* மருதாணி அரைத்து இடுவதற்கு முன்பாக கைகளை எலுமிச்சை பழச்சாற்றால் கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாக பிடிக்கும்.

* மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.

* நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.

* ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சுகப்பிரசவம் ஆகும்.

* கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்ந்து சாப்பிட்டால் குழந்தை, சுகப்பிரசவம் ஆகும்.

* துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து ஊரவிட்டு, குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர, இருமல் குறையும்.

* மனத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

* கோவைப்பழம் சாப்பிட பல் வலிக்கு நிவாரணம் பெறலாம்.


* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.


* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
_____________________________________________________________________________________________________